எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகின் மூத்த மொழி எங்களுடையது.. பிறர் நாக்கு ஒலி...

உலகின் மூத்த மொழி
எங்களுடையது..

பிறர் நாக்கு ஒலி பேச
பழகும் போதும்
கவிதைகளில் போட்டி
வைத்து பரிசு கொடுத்தது
எங்கள் தமிழர் இனம்..

எங்கள் வேலூர் புரட்சி
காட்டி
உங்களை சுதந்திரம்
வேட்க்கை கொள்ள
தூண்டியது என் தமிழினம்..

எங்களில் மருவி
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு பிறப்பித்தது
நாங்கள் தமிழரினம்..

திருப்பதி எங்களுடையது..
கல்லணை எங்களுடையது..
உலகம் பேசும் ஹரப்பாவும்
சிந்துச் சமவெளி நாகரிகமும்
எங்களை கண்டு
உருவாக்கிக் கொண்டது...

குரங்கின் நாக்கில்
முதல் பேச்சு
எங்கள் தமிழ் மொழி..

மாடு இன்றும் கூட
அம்மாவென்பது
எங்கள் தமிழ் மொழி...

ஒப்பிட எவனும் சரிக்குச்சமம்
இல்லாதவன் தமிழன்...
எங்களை ஒதுக்கி
இந்தியாவை தூக்கிட
நினைக்கிறது உங்கள் பாரதம்...

நாங்கள் உங்களோடு
இருக்கும் வரை தான் இது தேசம்..
எங்கள் உணர்ச்சி மீதினில்
தீயிட்டு பார்த்தால்
பிறந்திடும் ஓர் தனி தமிழ் தேசம்...

காவிரியை பூட்டி வைக்க
நினைக்காதீர்..
ஈழத்தமிழனை ஒதுக்க
விழையாதீர்..
பழந்தமிழை அழிக்க
துடிக்காதீர்..
ஓபியெஸ்சும் ஈபிபெஸ்சும்
மட்டும் இல்லை
எங்கள் தமிழ் அடையாளம்..

ஓயாமல் கூட்டு சேர்ந்து
இளைஞர்களால்
ஜல்லிக்கட்டை மீட்டதும்
எங்கள் தமிழனத்தின்
அடையாளம் தான்...

தமிழ் என்று பேசி
உயிர் விட்டுச் சாவோம்..
தமிழோடு விளையாண்டால்
உலகம் கொளுத்திவிட்டு
நாங்கள் உயிர் வாழ்வோம்..

இப்படிக்குத் தமிழன்

பதிவு : Barathi senthil
நாள் : 23-Feb-18, 3:25 pm

மேலே