எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசிப்பு..! “ நான் ஏன் இலக்கியத்தை.. இலக்கிய புத்தகங்களை...

  வாசிப்பு..!
“ நான் ஏன் இலக்கியத்தை.. இலக்கிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அதனால் என்ன பயன்?.” வாசிப்பு பழக்கம் இல்லாத ..அல்லது வாசிக்க நேரம் பெறாதவர்கள் மனதில் எழும் கேள்வி இது.நீங்கள்..நான் உட்பட யாவரும் பள்ளி..கல்லூரி படிப்புகளுக்கு பிறகு இயந்திரத்தனமான ஓட்டத்தில் .. பணம்.. சொத்து.. குடும்பம்.. குழந்தைகள் என ஒரு தொடர் இயக்கத்தில் நமக்கான தேடல்களில்.. நமக்கான செளகரியங்களுக்கான ஆர்வத்தில் புத்தகங்களை வாசிப்பத்தை விட்டுவிடுகிறோம். பிறகு புத்தகங்களையே வெறுத்துவிடுகிறோம். ஆனால் நமது வாழ்வு இயக்க கூறுகள் எதுவும் நம்மை சுற்றியுள்ள சமூகத்தின் தொடர்பு இல்லாமல் இயங்க முடியாது. இந்த தொடர்பை நாம் வலுக்கட்டாயமாக துண்டிப்பதாலே பல நடைமுறைச் சிக்கல்கள் அந்த சிக்கல்களிலிருந்து மீள தெரியாமல் பிரச்சினைகளை கையாள தெரியாமல்.. சமூக குற்றங்கள் நிகழ்கின்றன. சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவி அஷ்வினி வெட்டுப்பட்டதும்.. திருச்சி கர்ப்பிணி பெண் உஷா கொல்லப்பட்டதுமாக்கான ஒரு தீவிர மனம் சார்ந்த உளவியலை ஆராய்ந்தால்.. சமூகத்தை.. சமூக காரணிகளை.. மனிதர்களை புரியாத இந்த இடைவெளிதான். இந்த இடைவெளியை நிரப்பி.. குறுகிய நமது உலகத்தை தாண்டி பார்க்க ஊக்குவிப்பதும்.. சிந்திக்க வைக்க உதவுவதுதான் வாசிப்புப் பழக்கம். வாசிப்புப் பழக்கமும் ஒன்று என புரிக


.#வாசகசாலை 
வாசிப்பை ஊக்குவிக்க.. வாசிப்பை தூண்டிவிட.. வாசிப்பிற்கு தேவையான ஒரு உந்துதல் நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த உலகம்.. பிரபஞ்சம்.. நம் உடல்.. நம் இயக்கம்.. நம் சமூகம்.. நம் சக மனிதர்கள்.. மனிதர்களுக்குள் நிலவும் வேற்றுமை..கொடுமை...பிரச்சினை தீர்வு என நாம் யோசிக்காத களத்தில் பிரமிப்பூட்டும் சம்பவங்கள் நம்மை சுற்றி இயங்குவதை படைப்புகளாக படைப்பாளிகள் படைத்திருப்பார்கள். அந்த படைப்புகளில் நாம் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருப்போம். அவ்வித படைப்புகளை வாசிக்க தூண்டுவதும்.அவ்விதமாக வாசித்து.. வாசிப்பின் மூலமாகவே மானுடத்தை புரிந்து. நலம் பெற வைப்பதுமாக என.. . வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுக்கும் #வாசகசாலை எடுக்கும் ஒரு முயற்சி.. உழைப்பு.வாசகசாலை... நண்பர்களால் ஒன்றிணைந்து செயல்படும் ஓர் இலக்கிய அமைப்பு. 
சென்னையில் பெரும்பாலான வாசகர்களும்.. பிரபலமான எழுத்தாளர்களும். சந்திக்கும் பாலாமாக பல நிகழ்வுகளை நடத்தி அசத்தி இருக்கிறது. 300 க்கும் மேற்பட்ட..வாசகசாலை நிகழ்வுகளுக்கு பிறகு.. சென்னையை தாண்டி பல மாநகராட்சிகளிலும் நண்பர்களால் சென்ற மாதம் முதல் நிகழ்வுகள் “ இலக்கிய சந்திப்பு “ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வாக ஆரம்பித்து இருக்கிறோம். 
அதன் தொடர் செயல்பாடாக #திருப்பூர் மாநகராட்சியில்.. இரண்டாவது நிகழ்வாக.. கொங்கு மண்டலத்தில் சிறுகதைகளின் அடையாளமாக திகழ்ந்த மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அவர்களின் படைப்புகளையும் அவரையும் நினைத்து போற்றும் வகையில்.. ஒரு கலந்துரையாடலை முன்னெடுக்கிறோம். 
திருப்பூரில் #வாசகசாலை வழங்கும்
“ உப்புக்கடலைக் குடிக்கும் பூனை “ சிறுகதைத் தொகுப்பு. குறித்த கலந்துரையாடல் வருகிற மார்ச் 18 ம் தேதி ஞாயிற்றுகிழமை திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில் மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்புரையாக.. எழுத்தாளர் இளஞ்சேரல் ராமமூர்த்தி அவர்கள்.. இந்த சிறுகதை தொகுப்பை பற்றி விரிவாக உரையாற்ற உள்ளார், மேலும் வாசகர்களாக அருண் சுந்தர். மற்றும் சரண்யா ஆகியோர் வாசக பார்வையாக தங்களின் வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கிறார்கள். வாருங்கள் ஒரு ஞாயிறு அந்தி மாலை ஒரு இலக்கிய சந்திப்பில் வாசிப்பு அனுபவம் எவ்வாறு இருக்குமென அறியலாம்....!-#வாசகசாலை- திருப்பூர்.  

நாள் : 14-Mar-18, 12:57 pm

மேலே