பெண் என்பவள் ... ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள்...
பெண் என்பவள்...
ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்... அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்றுபொருள்...!
நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை எனில்... அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள் என்று பொருள்...!
ஒரு பெண் பல கேள்விக்குறியோடு உன்னை பார்க்கிறாள் என்றால்... நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று சிந்திக்கிறாள் என்று பொருள்...!
நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில வினாடிகள் கழித்து "நான் நலமாய் இருக்கிறேன்" என்று பதிலளித்தாளானால்... அவள் நலமாக இல்லை என்று பொருள்...!
ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல் உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானால்... நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என பொருள்...!
ஒரு பெண் உன் தோளில் சாய விரும்புகிறாளானால்.. நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று பொருள்...!
ஒரு பெண் உன்னை தினம் தினம் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறாளானால்... அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக இருக்க விரும்புகிறாள் என்று பொருள்...!
ஒரு பெண் உன்னிடம் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாளானால்... அதன் அர்த்தமறிந்தே அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறாள் என்று பொருள்...!
ஒரு பெண் "நான் உங்கள் பிரிவால் துயருறுகிறேன் " I MISS YOU" என்று கூறுகிறாளானால்... அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள் பிரிவால் வாடவில்லை என்று பொருள்...!
வாழ்க்கை ஒரு முறை தான்... இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்...
உங்கள் மனம் அறிந்து, அன்பை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை தேர்ந்தெடுங்கள்...
உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்..
என் அன்பானவளுக்கு
இராஜேஷ் ....