எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் கோபங்களுக்கு பதிலாய் எப்போதும் மகிழ்ச்சியே தருகிறேன் மந்தாரையாய்...

உன் கோபங்களுக்கு பதிலாய் 
எப்போதும் மகிழ்ச்சியே தருகிறேன்
மந்தாரையாய் மலரச் செய்கிறேன்
மனசலனங்களை மறைய செய்கிறேன்
வேள்வி தீ போல் எதையோ விதைக்கிறாய் நி
விளைவதென்னவோ உன் காதல்தான் 
விரல்பிடித்து நடக்க நீயில்லை 
உன்னோடு விரசங்கள் இல்லை 
திசைதெரியா தூரத்தில் நீ, 
திசையற்று நிற்பவன் நான் 
எண்ணங்கள்கூட வண்ணம்பெறா  
வாழ்வு நம்முடையது 
இருந்தும் தேடல் நம்மில் 
எனக்காய் நீயும் 
உனக்காய் நானும் 
மொழிபெயர்க்கிறோம் 
நம் மௌனங்களை 
விளைவாய் விரைவான விலகல்.....
இக்கதை தற்கொலை..

பதிவு : goldsmithsdscom
நாள் : 11-May-18, 2:34 pm

மேலே