" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட...
" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது. கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும். அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது. தமிழ் தழைக்கும்வரைதான் தமிழர்களும் தழைக்கலாம். தலைமுறைகளும் செழிக்கலாம். ஊற்றெடுத்து வேறிடமெனினும் தமிழ் நதியெனும் மகா நதியில் சங்கமித்து இன்று இங்கே இணைந்துள்ளோம். அனைத்துத் தமிழர்களையும் அணைத்து இணைத்து பிணைத்துச்செல்லும் பெருநதியாக என்றும் வற்றாது பிரவாகிக்கவேண்டும். " இவ்வாறு அண்மையில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் குவின்ஸ்லாந்து வாழ் கலை, இலக்கிய அன்பர்களும் இணைந்து நடத்திய 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட தமிழ்நதி சிறப்பு மலரில் குறிப்பிட்டுள்ளார் வாசுகி.