வயிற்றை விட்டு குதிக்கிறேன் பார் என்றதாம் குட்டி கங்காரு...
வயிற்றை விட்டு குதிக்கிறேன் பார்
என்றதாம் குட்டி கங்காரு
பிஞ்சிலேயே துடுப்பும் துடிப்பும்
துள்ளியதாம் சர் டொனால்டுக்கு
மேலபோர்ன் பிரிஸ்பேன் அடிலைட்
டிலைட்டாக சே சார் அடிகள்
பறந்த சாதனைகள் டனால்களாய்
கிறங்கடித்த கிரிக்கெட்டர் டொனால்டு
நாணயம் மியூசியம் ஹால் ஆஃப் ஃ பேம்
நாணயமாய் கண்டார் நம் பிராட்மன்
பாட்ஸ்மான் என்றால் பிராட்மன் துடுப்பில்
பாஸ்மார்க் என்றால் பிராட்மன் மார்க்
: கடையநல்லூரான்
: கடையநல்லூரான்