எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

2020, இந்த ஆண்டின் எண்கள் மட்டுமல்ல , தொடக்கமும்...


2020, இந்த ஆண்டின் எண்கள் மட்டுமல்ல , தொடக்கமும் சற்று வித்தியாசமானது. ஆம் ,நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துவிட்டது . 


பொதுவாக இதுபோன்ற தேர்தல்களில் ஒன்று ஆளுங்கட்சியோ அல்லது எதிர்கட்சியோ தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் . இதுதான் கடந்த காலத்தில் நாம் கண்டது . ஆனால் இன்றைய முடிவுகள் இருவரும் கிட்டத்தட்ட சமநிலையை தொடும் அளவில் மக்கள் தீர்ப்பளித்துள்ளது ஆச்சரியம்தான் . இதுவே இன்று கட்சிசாரா பொதுமக்கள் மனதின் எண்ண ஓட்டமாகத்தான் இருக்கும் . 


இந்த முடிவு ஆளுங்கட்சிக்கு சற்று தேய்மானம் அல்லது சறுக்கல் . எதிர்கட்சிக்குக் கூடுதல் வெற்றிதான் அல்லது ஏற்றம் என்பதை யாரும் மறைக்க முடியாது .மறுக்கவும் இயலாது . 


ஆனாலும் இந்த நிலை அடுத்து வரவுள்ள நகராட்சி , மாநகராட்சி தேர்தலின் முடிவை பொறுத்து உறுதிப்படுத்தப்படும் என்பது யதார்த்தம் . 


மக்கள் ஆழ்ந்து சிந்தித்து தமது முடிவுகளை எடுக்க வேண்டும் . அதனால் பயன்பெறப்போவது நாம்தான் என்பதையும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் . 

இதற்குமேல் நான் வெளிப்படையாக , உங்கள் மனதின் முடிவை கூறமுடியாது . 


நல்லதே நடக்கட்டும், நல்லவர்கள் ஆட்சி அமையட்டும் . தமிழ்நாடு நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது என் அவா . 

பழனி குமார் 
​03.01.2020​ 
            



நாள் : 3-Jan-20, 10:06 pm

மேலே