எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே பெண்னண போற்றிடு பெண்ணே நீ போற்றிடு! பெண்ணை...

பெண்ணே பெண்னண போற்றிடு


பெண்ணே  நீ
போற்றிடு!
பெண்ணை நீ
போற்றிடு!
பேதமை காட்டாது
பெருமையாய்
போற்றிடு பெண்ணை!

மகளாய் வந்திட்ட
மருமகளை நீ
மாசு கானாது
மனசு நோகாது
மங்கலமாய் வாழ்த்திடல்
மேன்மையே!

வன்சொற்களால்
வசைபாடாது
வன்செயலினை
வருத்தாது நீர்
வாழ்ந்திடு-பெண்ணே
வளமான வாழ்வினை!

போற்றா விட்டாலும் நீயோ
பெண்ணாய் வந்தவளை
பொன்னாய் மதிந்திடு!

தூய்மை வார்த்தைகளை
தூண்டிலாக்கி
தொய்யாது மனதை
தாலாட்டு!

செந்தேனாய்
செவ்வரிகளாய் பெண்ணே
செதுக்கிடு-நீ
செம்மை வாழ்வு
சித்திரமே-இருவருக்கும்!

மருமகளே நீயும்
மாமியாரை எண்ணிடு
மற்றோர் தாயாய்!

குறை சுட்டிக்காட்டினால்
நிறை யாக்கு!
வன் சொல் பேசுகையில்
வன்மையை மென்மையாக்கு!

வெறுப்பு காட்டாது
நட்பு காட்டு!
நிலைக்கும் உறவு முறை
நெருப்பாய் அல்ல
நரகமாய் அல்ல
நட்பாய்!

பாதரசமாய் ஒட்டாது
பந்தங்களை நீயோ
பதராக்காதே!

மருமகள்-மாமியார்
       உறவோ
முறியாது என்றும்
மனமொத்து வாழ
மல்யுத்தம் செய்யாது
மனக்கசப்பை மறந்து
மற்றொரு தாயாய்
மனமொத்து எண்ணிடு!
வேற்றுமகளாய் எண்ணாது
வேதனை தீர்ப்பவளாய் எண்ணிடு!
வாழ்வோ வசந்தமாகுமே!
வசந்தமாகுமே!

         பா.கலைமகள்
          விழுப்புரம்.

பதிவு : Kalaimagal
நாள் : 21-Jan-20, 1:40 pm

மேலே