எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாரதியார்? தாத்தா வீட்டு பூசையறையில் இருக்கும் அந்தப் படம்...

பாரதியார்?
தாத்தா வீட்டு
பூசையறையில் இருக்கும்
அந்தப் படம் சற்றே பழயபடம்
முறுக்கு மீசையோடு
நெற்றியில் திலகமும்
முரட்டு உருமாளும்
முகத்தில் கோபமும்கொஞ்சம் 
பயமாய்த்தானிருக்கும்
ஆத்தாவிடம் கோட்டபோது
தாத்தாவின் நண்பரென்றாள்
பார்த்துக்கொண்டே இருப்பேன்
அத்தப்படத்தை பார்க்கவே
வருவேன் தாத்தவீட்டிற்கு
ஐந்தாம் வகுப்பு படிக்கையில்தான் 
தெரிந்தது பாரதியாரென்று
ஐந்தில் எனக்கு புரிந்த பாரதி
அப்போதே மக்களுக்கு
புரிந்திருந்தால் எப்போதோ
கிடைத்திருக்கும் இன்பச்சுதந்திரம்

- பிரசாத் பாலசுந்தரம் - 

நாள் : 22-Jan-20, 9:41 pm

மேலே