சிரிக்கலாமே அழுகையில் பிறக்கிறோம் அழுகையில் மறைகிறோம் இடைபட்ட காலத்திலாவது...
சிரிக்கலாமே
அழுகையில் பிறக்கிறோம்
அழுகையில் மறைகிறோம்
இடைபட்ட காலத்திலாவது
வாய்விட்டு சிரிக்கலாமே
பிறரையும் சிரிக்க வைக்கலாமே
ஒரே சுவை மட்டும் இருந்தால்
உணவு ருசிக்காது வாழ்க்கையிலும்
இன்பம் மட்டும் இருந்து விட்டால்
அதன் அருமை புரியாது
துன்பம் கடந்து கிடைக்கும் இன்பம்
பாகற்க்காய் பொரியலில் ஒளிந்திருக்கும் வெள்ளம் போல
வெற்றிகள் மட்டுமே இருந்துவிட்டால்
முயற்சிகள் இருக்காது சோம்பல் தான் இருக்கும்
தோல்விகள் இல்லாமல் போய்விட்டால்
பாடங்கள் இருக்காது பகுமானம் மட்டும் தான் இருக்கும்
தோல்வியில் கிடைத்த பாடத்தில் கிடைக்கும் வெற்றி
பள்ளிக்கூட காதலியின் முத்தத்தை போல
மிச்சம் இருக்கும் வாழ்விற்கு முதல் நாள் இன்று
சொச்சமாக வாழாமல் அதை சுகமாக வாழலாமே
கண்மூடிகொண்டு உலகம் தீயது என்று
கேனைத்தனமாக வாழாதே
நீ கண்மூடும் நாள் அன்று
நூறு பேர் அழும் படி வாழ்