அகம் அகலா அகன் அகம் வென்ற அகன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...
அகம் அகலா அகன்
அகம் வென்ற அகன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகஸ்துதிக்கான பாயிரம் அல்ல இது
முகத்திலும்
அகத்திலும்
பூத்தவனுக்கான
பாயிரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வலைத் தலத்தில் தமிழைப் பூக்கவிட்டு
கலைத்தலத்தின்
மனங்களை வென்றவனே!
நீ தந்த
கலைத்திறத்தால்
காவியம் படைக்கிறேன்
களைத்திடாமல்
என்னை வளைத்து விட்டாய்
குழைத்திடாத கவிதையினால்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழிடம் கேட்டேன் உன்னை
வலையில் பூக்க வைத்தவன் யாரென்று
முகவுரையைச் சொல்லாமல்
உன் முகவரிதான் சொன்னது தமிழ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ யாரோ ? நான் யாரோ ?
ஆனால்
தமிழ் நன்றையும்
தலம் ஒன்றையும்
தந்து விட்டு
அகத்துக்கு பாலமிட்டதால்
அகன் ஆனாய் நீ!
அணையா அகல் ஆனாய் நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தலத்து மன்னர்கள் தந்துதவிய
கவிகளில்
சிப்பிகளை நீக்கி விட்டு
முத்துக்களைத் தேர்ந்தெடுத்து
கவி விருது வைத்தாயே!
அந்தச் சாகரத்தில் நீந்தி
உயிர் பிழைத்தாய் எப்படியப்பா?
புதுமை!!! புதுமை!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு குழந்தையைப் பிரசவிக்க
அந்த தாய் படும் வேதனையின்
பன்மடங்கை எப்படி நீ !!!!!
தாங்கிக் கொண்டாய் !!!!
வலியினின்றும்
நீங்கிக் கொண்டாய்... (உண்மையைச் சொல்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2015 ஆம் ஆண்டில் சனத்தொகை
மதிப்பீட்டை இப்போதே செய்துவிட்டேன்
தமிழன்பன் உன்னை வாழ்த்தி விட்டால்
தரணி வாழ்த்தியதாய் அர்த்தம்
ஆதலால் வாழ்த்தும் போதே நான்
எண்ணிக் கொண்டேன்
சனத்தொகை இவ்வளவு தான் என்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரம் செய்து மாலையாக்கியும்
கவிதையில்
சாரம் எடுத்து சாலை ஆக்கியும்
வாழ்வை மாற்றுபவன்
நீ ஒருத்தன் ஐயா!!!!
வாழ்க நீடூழி!!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~