எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காயங்கள்.... மரங்களே உங்களின் இலைகளும் கிளைகளும் உதிற்கின்றனவே உங்களுக்கு...


காயங்கள்....

மரங்களே உங்களின் இலைகளும் கிளைகளும் உதிற்கின்றனவே உங்களுக்கு காயம் ஆனதா?

இல்லை. அவைகள் எங்களுக்கு "உரமாகின்றன"...

நதிகளே பள்ளங்களிலும் , பாறைகளிலும் மோதுகின்றீர்களே உங்களுக்கு காயம் ஆனதா?

இல்லை. நாங்கள் எங்கள் தன்மையால் " சமன்செய்து கொண்டோம்"...

முங்கில்களே உங்களை துளையிடுகின்றனரே உங்களுக்கு காயம் ஆனதா?

இல்லை.நாங்கள் அவற்றின் வழி "தூய இசையை" தருவித்தோம்.

ஓரரு வுள்ளவர்களே நீங்கள் உன்னதமானவர்கள்...

ஆறறிவு உள்ளவர்களோ நினைவுகளால் காயத்தை காயமாக்குகின்றனர்.

உங்கள் கண்களால் கூர்ந்து நோக்குங்கள் அவை காயங்கள் இல்லை, உங்களுக்கு "வேதம் கற்பிக்கும் ஆசிரியர் கள்"


பதிவு : Devaki
நாள் : 11-Jun-21, 7:20 am

மேலே