எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்சுவையே . பார்க்கும் விழி இரண்டில் ... நான்...இன்சுவையே .
பார்க்கும் விழி இரண்டில் ...

நான் மயங்கி கிடப்பதெல்லாம்
நினைவின் புதுமை...

இன்னிசையே .
கேக்கும் செவி இரண்டில் ...

நீ கையில் கிடைப்பதெல்லாம் 
வாழ்வின் மகிமை ...

காட்சிக்காட்டும் கண்ணும் ...
ஊடகமெனும் உள்ளத்தில்
உன் அழகியமுகம் நேரலை...

சாட்சிசொல்லும் விண்ணும் ...
மின்னலெனும் ஒளிவடிவில்
கோடியேபோகும் உன் புன்னகை...

அன்புக்காகவே தொடருதே 
முடியாத என் நோன்பு ...
அன்புக்காகவே தொடருதே 
முடியாத என் நோன்பு ...

திக்கித் திணறுதே
மூச்சுக் காற்றும் ...

தொந்தரவு தரும்
என்னஒரு அடக்கம் ...

சிக்கிப் பிழைக்குதே
உயிர் ஒன்றும் ...

முன்னறிவிப்பு தரும்
தன்தவிப்பு தொடக்கம் ...அனுதினம் ஒரே ஞாபகம் 
அனுபவம் புதுவிதம் ...
மனதின் ஆழத்தில் 
ஒரு ஆழிப் பேரலை ...

அதிகாலை முளைக்கும்
அந்திமாலை அழைக்கும் ...
ஹார்மோனின் கூட்டத்தொடரில்
ஒரு காதல் பேரவை ...

இனிவரும் கேள்விக்கு
அன்பே விடை ...
ஆதி முதல் அந்தம் வரை
அன்பே நிலை ...


ஏகாந்த இரவின் நடுவில்
ஆனந்த காற்றின் வருடல் ...
ஆகாய கூடாரத்தில் தங்கும்
தற்காலிக மானிடன் தேடல் ...


அடிநெஞ்சில் நீ அறிமுகம் ஆனது 
இன்பம்வரக் காரணம் ...

உளறிய நாவின் 
அமைதி 
பாசை ..

காதல் தாக்கல் செய்தது என்
கவனம்மாறக் காரணம் ...

சிதறிய உயிரின் 
திரள் 
பாவை ...

காத்துதோடு காத்தா 
மானம் பறக்குது ...

மப்பும் மந்தாராமாகி 
இதயம் இடிக்குது...

உன்னோடு நானாக
நாளும் கடக்குது ...

மத்தாப்பு மாதிரி 
மனசும் சுத்துது ...

                                      ~ பரத்

பதிவு : BARATHRAJ M
நாள் : 11-Jun-21, 7:30 am

மேலே