எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*சாதனைப் பெண்.* பெண்னே நீ அடக்கு முறைக்கு அடங்கிப்...

*சாதனைப் பெண்.*

பெண்னே நீ அடக்கு முறைக்கு அடங்கிப் போகும் அற்ப்ப பொருள் அல்ல.

பலரது ஆசைக்கும், உணர்வுகளுக்கும் விருந்தாகி பின் வீசப்படும் கழிவு அல்ல.

வறுமைக்காக படிப்பிளந்து பட்டம் பதவிக்கு தகுதி அற்று அடுப்பறையில் உறங்கிக் கிடக்கும் ஊமை அல்ல.

நீ எம் சமூகத்தின் ஆணி வேர் என்பதை மறந்து விடாதே.

உயிரினங்கள் அத்துனைகளினதும் பிறப்பிடம் உன்னில் தான் உருப்பெற்றது. 

உன்னால் பல சாதனைகள் உலகில் உதித்திருக்கிறது.

பல ஒளிக்கீற்றுகள் உலகின் இருள் போக்கி இருக்கிறது.

பல சவால்களின் பின் சாதனைப் பெண்ணாய் சந்திரனும்
முதல் கண்டது உன்னைத்தானே.

*பெண்ணே!*

பாரத நாட்டின் அத்தனை தங்கப் பதக்கங்களும் உன் பெயர்தானே சொல்கிறது.

பளிங்கு மாளிகை தாஜ்மஹால் காதல் சின்னமாய் உலகில் உருவெடுத்தது உன்னால் தானே.

மூதுரை எனும் பெரும் காப்பியம் உருவெடுத்தது உன்னால்தானே. 

இன்னும் நீ முடங்கிக் கிடப்பது ஏனம்மா.

அன்று போல் இன்றும் சாதனைப்
பெண்ணாய் உயர்ந்திடு. 

_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_

பதிவு : Kavipoikai
நாள் : 25-Jul-21, 2:12 pm

மேலே