மாதா பிதாவிற்கு இணையான இதயமே... என் இதயத்தை விரட்டி...
மாதா பிதாவிற்கு இணையான இதயமே...
என் இதயத்தை விரட்டி இடம் பிடித்த
முதல் நாயகியே..
அவள் சொல் மீறாது
பாராட்டை பெற்றிடவே
புத்தகத்தில் புதைந்தேனே...
என்னால் எல்லாம் முடியுமென்பதை
என் மூளையில்
முடிச்சு போட்ட முத்தழகியே..
மந்த புத்தியில்
வெள்ளையடித்து வெளிச்சம் தந்திட்ட
வெள்ளி நிலாவே..
உயிரும் மெய்யும் கற்பித்து அன்பு ஆசிரியையே...
நவீன சரஸ்வதியாக இருந்து எங்களின் அறிவுப்பசியை போக்கிய அன்பு உள்ளமே..
உன்னை விட சிறந்த ஆசிரியை யுகத்தில் வேறு ஏது...
என்றேன்றும் போற்றும் வாழ்த்துக்கள் இது..