எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*விலங்குகள்* பற்றி ஒரு *கவிதை* எழுதி இருக்கிறேன் *நண்பர்களே*...

*விலங்குகள்* பற்றி ஒரு *கவிதை* எழுதி இருக்கிறேன் *நண்பர்களே* இது பற்றி தங்கள் *கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்*...



🐘🐕🐐🐆🐅🦈🐋🦮🐩🐕🐖

*விலங்குகள்*
*நாட்டின் செல்வங்கள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🐶🐱🐘🦧🦛🦛🐅🐆🦓🐏🐕

இயற்கை அன்னை
தன் செல்வங்களையும்
வளங்களையும்....
விலங்குகள் பறவைகளாக
உருமாற்றி
வைத்திருக்கிறாள்....!!

தாயில்லாதக்
குழந்தைகளுக்கும்....
தாய்ப்பால்
கிடைக்காதக்
குழந்தைகளுக்கும்
மாற்று அன்னை தான்
பசுமாடு...!!

பெரும்பாலான
விலங்குகள்
சிபி மன்னனின்
மறுபிறவிகள் தான்...
ஏனெனில் ?
அவைகள்
நமக்காக
உடல்
தசைகளையே! அல்லவா
அறிந்துக் கொடுக்கிறது..?

இன்று
காக்கிச்சட்டை
போடாமலும்....
லஞ்சம் வாங்காமலும்
காவல் பணி செய்வது
நாய்
மட்டும்தான்......!!

உன் எதிர்காலத்தை
தெரிந்துக்கொள்ள
கிளியைக்
கூண்டில் அடைக்கிறாய்....
கிளியின் எதிர்காலம் ?

உன் ஆசைக்காக
மீன்களைத்
தொட்டியில் வளர்க்கிறாய்....
மீன்களின் ஆசை ?

உன் வாழ்க்கைக்காக
குரங்கை
கயிற்றில் கட்டிடுகிறாய்....
குரங்கின் வாழ்க்கை ?

ஒரு வாரம்
நீ வீட்டுக்குள்ளேயே !
இருந்து பார்....
நாளெல்லாம்
கூடைப்பெட்டிக்குள்
அடைப்பட்டிருக்கும்
பாம்பின்
அவஸ்தை புரியும் ..!!

ஒரு நிமிடம்
தலையாட்டிக் கொண்டே
இருந்து பார்.....!
பூம்பூம்மாட்டின்
கழுத்து வலியின்
வேதனை புரியும்...!!

ஒரு நாளைக்கு
பிச்சை எடுத்துப் பார்
யானைப்படும்
அவமானத்தின்
அவலம் தெரியும்....!!

வாயில்லா ஜீவன்களை
பிரம்பு கொண்டு
அடிக்கிறாயே..!
நீயும்
பிள்ளைப்பருவத்தில்
பெற்றோரிடம்
ஆசிரியரிடம்
பிரம்பில்
அடி வாங்கியிருப்பாயே !
அதன் வலியை
மறந்து விட்டாயா ?
மரித்து விட்டாயா ?

விலங்குகளை
இனியும்
பணத்திற்காக
நீ வேட்டையாடினால்...
காலம் உன்னை
பிணத்திற்காக
வேட்டையாட
தொடங்கி விடும்...!!

'அடித்துப்போட்டால்
கேட்பதற்கு ஆளில்லாத
அநாதை நாய்' என்று
திட்டுகின்றவர்களே!
உங்களுக்கு தெரியுமா ?
எத்தனையோ
அனாதைகளுக்குக்
அதுதான்
ஆதரவாக
இருக்கிறது என்று.....

தவறு
செய்கின்றவர்களை
'அறிவு கெட்ட
கழுதை' என்று
வசை பாடுகிறீர்களே!
ஆட்டுப்பால்
மாட்டுப்பால்
எருமை பால் விட
கழுதை போல
அதிகம் என்பதை
நீ அறிவாயா?

'எருமை மாதிரி
நிக்கிறியே 'என்று
சோம்பேறிகளுக்கு
உவமைப்படுத்துகிறாய்...
உன்னுடைய
அறியாமை செயலுக்கு
அது எதிர்வினைச் செய்தால்
ஒவ்வொரு நாளும்
உனக்கு
கை கால் மண்டை
உடைந்து போகும்....
அது அமைதியின்
அடையாளம்....

மனிதனே!
முடிந்தால்
நாயிடம் நன்றியையும்
எறும்பிடம் சேமிப்பையும்
பூனையிடம் தூய்மையையும்
யானையிடம்
திறமையையும்......
சிட்டுக்களிடம்
சுறுசுறுப்பையும்...
டால்பின் மீனிடம் உதவியையும்
காகத்திடம் ஒற்றுமையையும்
புறாவிடம் சுயஒழுக்கத்தையும்
சிங்கத்திடம் வீரத்தையும்
சிலந்தியிடம்
தன்னம்பிக்கையையும்
மண்புழுவிடும்
பொதுநலத்தையும்
ஆட்டிடம் தியாகத்தையும்
மாட்டிடம் உழைப்பையும்
தேனீக்களிடம்
முயற்சியையும்....
ஆமையிடம் அடக்கத்தையும்
பச்சோந்தியிடம்
பாதுகாப்பையும்....
நரியிடம்
புத்திசாலித்தனத்தையும்....
கொக்கிடம்
பொறுமையையும்.....
கற்றுக்கொள்
பகுத்தறிவு
புனித படட்டும்.....

விலங்குகளை நேசி
மனிதனாவாய்.....!!
விலங்குகளை பராமரி
தெய்வமாவாய்....!!

*கவிதை ரசிகன் குமரேசன்*


🐶🐱🐭🐹🐰🦊🦊🐻🐼🐻‍❄🐨

நாள் : 11-Oct-22, 4:40 pm

மேலே