எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காகித குப்பை வாழ்வினிலே காற்றடித்து பறக்காதவர் யார் தூக்கி...

காகித குப்பை வாழ்வினிலே
காற்றடித்து பறக்காதவர் யார்

தூக்கி வீசும் காற்றினிலே எதற்க்கோ
தூதாய் செல்லும் காகிதமே
காற்று போகும் பாதையிலே
நீயும் போய்விடு காகிதமே

சில நேரம் தென்றல் வந்து
உறவாடும் உன்னோடு சொந்தம்
கொண்டு உரையாடும், அழகிய கவிதை
எடுத்து வந்து உன் மேனியில் எழுதி
மகிழ்ந்தாடும் ..................

மகிழ்ந்து கொண்டு இருக்கையிலே உன்னை
சூரைக்காற்று துணை தேடும்
அடித்து முடித்து கசக்கிய பின் எங்கேயோ
சென்று மறைந்தோடும் ..........

கண்கள் விழித்து பார்க்கையிலே
உந்தன் கவிதைகள் எல்லாம்
அழிந்திருக்கும், கவிதை போன துக்கத்திலே
கண்ணீர் உன் மேனிகளில் எல்லாம்
வழிந்தோடும்............

காலம் செல்லும் சில பூங்காற்று
திரும்பும் காணாமல் போன உன் கவிதைகளை
எல்லாம் அழகாக்கி மீண்டும் கொண்டு வரும்........

வசந்த காலம் வந்தது என்று
உன் உள்ளம் இன்பம் கொண்டு துள்ளி
எழும்...........

காத்திருந்த புழுதி காற்று
காரணம் இன்றி தாக்க வரும்
தாக்கி முடித்து போன பின்பு தான்
இங்கே எதுவுமே நிலை இல்லை
என்ற தெளிவு வரும்..............

தெளிவு வரும் வேளையிலே
உன் மேனி எல்லாம் தளர்ந்திருக்கும்
உன் கவிதை போட்ட குட்டிகள் யெல்லாம்
உன்னை விட்டு பிரிந்திருக்கும்.........

ஓர் நாள் காற்று நிற்கும் காகிதம் நிலைக்கும்
அன்று காகிதத்தின் மேல் இருந்த
தூசிகள் எல்லாம் எங்கெங்கோ
சென்றிருக்கும்......­.

அது வரை காத்திரு
என் காகிதமே..............

நாள் : 2-Jun-14, 11:38 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே