உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூனில் இரு சகோதரிகள் பாலியல் பலாத்காரம்...
உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூனில் இரு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.ந. பொதுச்செயலாளர் பான்.கீ மூன் உலகில் இதுபோன்ற பாலியல் குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், உலகளவில் கடந்த இரு வாரங்களாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் உத்தரபிர தேசத்தில் இரு சகோதரிகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.
அதோடு பெண்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.