நம் படைப்புக்கள் அக்னியாகட்டும் -சமுதாய அவலத்தை பொசுக்கட்டும் நம்...
நம் படைப்புக்கள்
அக்னியாகட்டும் -சமுதாய
அவலத்தை பொசுக்கட்டும்
நம் படைப்புக்கள் -அன்பு
அமுதமாகட்டும் -உன்னத
இன்பத்தை கொடுக்கட்டும்
நம்மை நாமே
வஞ்சித்து, புகழ்ந்து
எழுதி என்னப்பயன் ?
நம் பார்வைகள்
நம்மிடமிருந்து விடுதலையாகட்டும்!
அங்கே பாருங்கள்.
வன்கொடுமையும்
பெண்ணடிமையும்
அதோ ! பாருங்கள்.
அரசியல் சாக்கடையில் ...
ஆளுபவன் ஊழல்குழியில்
அதோ ! அதோ !
அங்கே பாருங்கள்
சுகாதாரக்கேடும்
”இயற்கை”சாவும்
இதோ ! இங்கே
இதனை பாருங்கள்
மிருகவதையும்
”மனிதம்” மரணமும்
வாருங்கள் எழுதிடுவோம்
கண்டித்து எழுதிடுவோம்
தண்டிக்க சொல்வோம்.
புதிதாய் தேடுவோம்.
புதுமையாய் எழுதிடுவோம்
புது ரத்தம் பாய்ச்சி
புரட்சி கொடி பிடிப்போம்
புதிய தலைமுறை நாம்
புதிய அத்தியாயத்தை எழுதுவோம்.
நாளை நாம் மரணித்தால்
இந்த மண்ணும் சொந்தமல்ல
அந்த வானமும் சொந்தமல்ல
நம் உடல்
மின்மயானத்தில் ..
ஒருப்பிடி சாம்பலாக….
காலம் மாறிவிட்டது
அறிவியல் மாற்றிவிட்டது -நம்
அறிவுகளையும் மாற்றுவோம்.
எழுத்தாளர்களாக நாம் சாதித்தால்
நாம் நாளைய சரித்திரத்தில்......!!!
-------------------------------இரா. சந்தோஷ் குமார்