வெண்மலரில் கற்கண்டை பதித்தபடி விழியிருக்க, மென்னிதழில் முத்துமலர் கோர்த்தபடி...
வெண்மலரில் கற்கண்டை பதித்தபடி விழியிருக்க,
மென்னிதழில் முத்துமலர் கோர்த்தபடி நகையிருக்க,
கன்னமது கவி நிலவின் வண்ணமதில் குழைந்திருக்க,
என்னவளின் எண்ணத்தில் நான் மட்டும் பூத்திருக்க,
சிந்தனையின் படிமத்தில் செதுக்கிய நல் சிறு நகையே,
நந்தவனப் பொன்னிதழில் தன்னுடலைக் கொண்டவளே,
பெண்மையிலே மென்மையுடன் திண்மையையும் தைத்தவளே,
தந்திடு உன் தளிர் கரமென் தனிமையினைத் தவிர்த்திடவே!