தளபதி- (நண்பனுக்கு நண்பன்)...!!

நண்பா உயிர் நண்பா
கனவில் தினம் வரும் நண்பா..!!
என்னுடன் சிரித்தாய் அழுதாய் என்றால்
ஏன் என்னை விட்டு போனாய் என் நண்பா..!!

முதலில் பார்த்த போது யாரோ போல
என்னை நினைத்து விட்டாய்,
பின்னாளில் பழகி பார்த்து
உன்னுடன் என்னை சேர்த்து விட்டாய்...!!

எங்கேயும் எப்போதும்
என்னுடனே இருந்தாய்..!!
வீணாக சண்டை வந்தாலும்
என் அருகிலே நின்றாய்..!!
ஊர் சுற்றும் நேரத்தில்
தானாக கைகோர்த்து வந்தாய்..!!
அடித்தாலும் பிடித்தாலும்
கட்டியணைக்கவே செய்தாய்..!!

என் சோகம் என் பாசம்
எல்லாமே நீ தான்..!!
என் நிழலும் என் உயிரும்
நீ இல்லாமலே இல்லை..!!
என் பேச்சும் என் மூச்சும்
உனக்காகவே என்றானது..!!

உன்னோடு நான் வாழ்ந்ததை
நிமிடத்தில் சொல்ல முடியாது..!!
நீயின்றி என்னுயிர் எங்கே
பிரிவது என தெரியாது..!!
யாருக்கும் உன் நினைவு
விரைவில் மறக்க முடியாது..!!
ஆனாலும் நான் மறந்தேன்
நீ இல்லாத அந்த நிமிடங்களை.....,

காலம் வந்தாலும் போனாலும்
உனக்காக காத்திருப்பேன்..!!
யார் என்ன சொன்னாலும் கேட்டாலும்
உன் பெயர் நான் நினைப்பேன்..!!
தூரம் நீ சென்றாலும் மறைந்தாலும்
உன்னுடனே நானும் இருப்பேன்..!!

அருகில் இருந்த போது தெரியவில்லை
உன் அளவில்லா ஆச்சரியம்..!!
பிரிந்து விட்டு புரிந்துகொண்டேன்
நீயும் ஒரு அதிசயம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (17-Jun-13, 1:57 pm)
பார்வை : 305

மேலே