நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்....!!!
சில நிமிடம் மனித வாழ்க்கையை
திரும்பி பார்த்தால்,
அவன் எதிர்பார்த்து ஏமாந்ததை விட
அதுவாக கிடைத்தவையே அதிகம்..!!
மனிதன் புதிதாய் ஒன்றை
பார்ப்பதற்கு முன்பே
கற்பனைகள் செய்து விடுவான்..!!
நேரில் அதை பார்க்கும் போது
அதுபோல் இல்லையெனில்
உடனே கற்பனையில் சில
பிழை திருத்தம் செய்து விடுவான்..!!
மனிதன் நினைத்தவை எல்லாம்
நடக்க வேண்டுமென
எதிர்பார்ப்பான்..!!
எப்படியும் நடக்காதென
தெரிந்தே தனக்கு தானே
அறிவுரை கூறிகொள்வான்..!!
மனிதன் தன்னை எப்போதும்
இந்த உலகத்திற்கு அறிவாளியாக
காட்டவே துடிப்பான்..!
ஒரு கட்டத்தில் உலகமே
அவனை முட்டாளாக்கும் போது
அதற்கும் பாவமாய் விளம்பரம்
தேடியே அலைவான்..!!
யார் வந்தாலும் போனாலும்
மனிதன் தன்னை
மனிதனாக மட்டும்
காட்டிகொள்ள விரும்ப மாட்டான்..!!
மனிதன் அவனுக்காக
தேடிய பக்கங்களை விட,
வாழ்க்கையின் நடுவில் தொலைத்த
பக்கங்களே அதிகம்...!!