இயற்கையொடும் இணைந்த வாழ்வு--- நற்றிணைச் செய்திக் கட்டுரை--04

இயற்கையொடும் இணைந்த வாழ்வு:--- நற்றிணைச் செய்திக் கட்டுரை--03---திணை குறிஞ்சி-இயற்றியவர் கபிலர்.

சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின்
சுளைகளையுடைய வீட்டின் முன்னுள்ள வெளியிடத்தில், அவ்வீட்டின் தலைவி இரவு நேரத்தில் நெருங்கி விழுகின்ற வெள்ளிய அருவியினது ஒலியைக் கேட்பவளாக உறங்காது இருப்பாள்;
அவள் கைவளையும் அகன்ற தோள்வளையும் அணிந்த முன்னங்கையையும், ஒளிபொருந்திய நெற்றியையும், இளமையையுமுடைய மனையோளானவள்; அவளது ஆபரண அணிகள்,
பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சிற்றூரின்கண்ணே கைவல் வினைஞன் வாளரத்தால்,அராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய கைவளையும் அகன்ற தோள்வளையும் ஆம்.

இனிப்பாடல் வரிகளைப் படிப்போம், உணர்வோம்:

செவ்வேர்ச்
சினைதொறுந் தூங்கும் பயங்கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலிவெள் ளருவி ஒலியின் துஞ்சும்
ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன்
வாளரம் பொருத கோண்ஏர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்
.......................................குறுமகள்
குவளை யுண்கண் மகிழ்மட நோக்கே.
=======
அரும்பதம்: கோண்=கோணிய,வளைந்த;
===== =======
காட்டருவி ஒலியதும், கேட்டயராள் இளமையதும்,
வேட்டணிந்த அணினலனும், உள்ளூர் வினைஞர்தம்
மாட்சிமையும் காட்டுமிம் மகிழ்ச்சியினை
மீட்டெடுக்க முடிந்துவிடின் மேனாட்டார் ஆகோமோ?
=== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (19-Apr-14, 8:59 am)
பார்வை : 518

சிறந்த கட்டுரைகள்

மேலே