காட்சிப் பிழைகள்-36 பனிமலர்

தட்டுத் தடுமாறுதே நெஞ்சம்
அன்பிலே திக்குமுக்காடி
தேம்புகிறேன் அவள்நினைவில்
மாராப்பில் எனை மறைத்து
மஞ்சமென நெஞ்சம் தந்து
அவள்மடியில் நான் தவழ
ஆசையுடன் காத்திருக்க
ஓரக் கண்ணால பார்த்தாளே ,
என் கண்ணில்அவள் பார்வை ,
பார்க்கும் இடமெல்லாம் அவளாக
கோவைப் பழ இதழ்களினால் கொடுத்தாள் பறக்கும் முத்தம் ஓன்று
காற்றாக அது வந்து என் உதட்டில் மோதிடவே
உடல்முழுதும் பொன்னாலே இழைத்திட்ட புதுப் பொலிவு
புது ஊட்டம் புது உணர்வு மாற்றம் ஓன்று எனக்குள்ளே
என்ன இது/ என்ன இது/ கிட்ட வராமலே
அவள் கொடுத்த முத்தத்திற்கும் பார்வைக்கும்
இத்தனை சந்தோஷமும் சங்கதியும் என்னிடத்தில்
அவள் நினைவில் உறக்கமில்லை எந்தனுக்கு
செல்லமாய் அவள்வந்து காதோரம் கடிப்பது போல்
எண்ணங்கள் வந்து வந்து தூக்கமதை கண்ணருகே
நெருங்கவிடுவதில்லை ,
தந்திடுதே ஏழேழு ஜென்மங்கள் வாழ்ந்த சுகம்
அவள் இடையழகில் கரம் கோர்த்து களி நடனம் அவள் புரிய
அவள் நாணம் நான் ரசிக்க
காதல் கொண்ட காதலனாய் ஏக்கமுடன் நானும்
நான் தூங்கி எழும் முன்னே அவள் எழுந்து என் பாதம் தொட
மீண்டும் என் போர்வைக்குள் அவளை
இன்னும் எத்தனை எண்ணங்கள்
என் கஜலில் நிறைவேறுமா/ ஏக்கம் தான் மிஞ்சுமா/
நானாக தேடுகின்றேன் கேட்கின்றேன் வந்து விடு
வால் அறுந்த பட்டமென துவளுகின்றேன்
காற்றோடு கலந்திடுவேன் என நினைக்கவில்லை
ஆனால் அந்நிலைக்கு எனைத் தள்ளிடுவாயோ என
அச்சமொன்று தெரிகிறது ,
இருந்தாலும் செத்தாலும் உன்னாலே அது போதும் எனக்கு
நான் கொண்ட காதலுக்கு சாட்சியாக உன் மனசாட்சி பதில் சொல்லும்
என் காதல் அழியாது காத்திருக்கும் காலம் எல்லாம்
இல்லை எனில் புனிதமான என் காதல்
உன் காவலாய் இருந்திடட்டும்,
இது உண்மைக்காதல், உபதேசம் அல்ல ,
என்றும் அழியாத ஆன்மீகக் காதல்
நான் கொண்ட கஜல் உண்மையானால்
நீயாக என்னைத் தேடி வருவாய்
இது என் கஜல் மீது சத்தியம்