வெள்ளாம வெளஞ்சிருக்கு - கிராமத்துக் கவிதை

கிராமிய கவிதைச் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

வெள்ளாம வெளஞ்சிருக்கு கண்ணம்மா !
வெதச்ச நெல்லும் கதிராச்சு கண்ணம்மா !
வெந்த நெஞ்சும் மாறிடிச்சு கண்ணம்மா !
வெள்ளி மெட்டி வாங்கித்தாரேன் கண்ணம்மா !


தைமகளும் பொறந்திடுவா பொன்னம்மா !
தழைக்குமடி தரிசுகளும் பொன்னம்மா !
தரமான வெள நெலமும் பொன்னம்மா !
தந்திடுமே வெள்ளாம பொன்னம்மா !


நாத்துநட வாடிபுள்ள கண்ணம்மா !
நட்டு வெச்சா சோறுண்டு கண்ணம்மா !
நல்ல மழை பெய்யுமடி கண்ணம்மா !
நகரத்துக்குப் போவாதடி கண்ணம்மா !


கண்ணீரு வேணாமடி பொன்னம்மா !
தண்ணீரு வந்திடுமே பொன்னம்மா !
விண்ணீரு தப்பாதடி பொன்னம்மா !
மண்ணீரா மாறிடுமே பொன்னம்மா !


வாடிப் போன கதிரெல்லாம் கண்ணம்மா !
நாடி வந்து பலன்கொடுக்கும் கண்ணம்மா !
பாடிடுவோம் நடவுபாட்டு கண்ணம்மா !
ஆடி வருவா காவேரி கண்ணம்மா !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Jan-17, 4:58 pm)
பார்வை : 117

மேலே