தம்பிக்கு ஒருசொல் -கங்கைமணி

(சும்மா ....ஜாலியா...ஒரு கவிதை !)



தம்பி நீ அடங்கு -உன்
மனச கொஞ்சம் அடக்கு.
அவமேல் உனக்கு ஆச
அதனால் வளர்த்த மீச.

அவ கொடி விடுத்த கனிடா
அவ குதிச்சுவரும் சிலைடா
அவ ஊரசரும் அழகு
அவ ஒசர இருக்கும் நிலவு.

ஆசைவச்ச தம்பி ,நீ
அழிஞ்சிடாத நம்பி.
அண்ணே சொல்லிவாறே
அரியெடுத்து தாரேன்
அவளப்பத்தி யோசி
அதன்பிறகு நேசி !

அவ ஓரப்பார்வையில
ஓங்கி அடிக்கிறவ!
நீ… அவ நிழலை பார்த்துப்புட்டே
அடங்கி ஒடுங்கிறவன்.

அவ ஒத்தஜடை ரோஜாவையே
உத்துப்பார்த்தா திட்டுறவ.நீ
உரலுக்கட பக்கத்துல
மிரண்டுபோயி சுத்துறவன் .

நீ தேனெடுக்கும் ஆசையில
தீயெடுத்து வைக்கும் ஆளு.
அவ தலைதெறிச்சு ஓடயில
தேடிவந்து கொட்டும் தேனீ !.

அவ!.. ஆர்ப்பரிக்கும் ஆற்றுவெள்ளம்
அத அடக்கத்தான் முடியாது.நீ
கசிந்தோடும் ஊற்றுவெள்ளம்
கலந்தாலும் தெரியாது.

அவள் சூடான தின்பண்டம்
அதன் சுவையறியமுடியாது.நீ
சுட்டெடுத்த அப்படம்,அவள்
சுண்டுவிரல் தாங்காது.

ஊட்டிமேகம் ஊரைச்சுத்தும்
ஒசந்தமலை முத்தம்வைக்கும்.இதில்
உனக்கு என்ன குத்தம்-
உன் மனசுக்குள்ள யுத்தம்!.

வேர் விழுந்த சுவரு,அது
விரிசல் விடும் தெரிஞ்சுக்க!
அவள் மேலிருக்கும் காதல்
உன்ன அழிச்சுப்புடும் விளங்கிக்க.

அவ ஆடிவரும் தேரு.
அது ஆப்புவைச்சா அடங்கும்!
நீ அடிபடாத ஆளு,
அகப்படாம ஒதுங்கு!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (3-Aug-17, 9:03 am)
பார்வை : 339

மேலே