‘சொல்லத் தோணுது’
தங்கர் பச்சான்
விலை: ரூ.200.
கிழக்குப் பதிப்பகம் வெளியீடு
வாசகர்கள் ‘தி இந்து’வில் கொண்டாடிய தொடர்களில் ஒன்று, ‘சொல்லத் தோணுது’. நூலாக வந்திருக்கிறது. அன்றாடம் நாம் சம்பவங்களாக அல்லது செய்திகளாகக் கடந்து செல்லும் சமூக அவலங்களைச் சுட்டி பீறிட்டு எழுகின்றன தங்கர்பச்சானின் கட்டுரைகள். ‘ரௌத்ரம் பழகு’ என்ற பாரதியின் வார்த்தைகளின் வலிமையை உணராதவர்கள் அல்ல நாம். ஆனால் பல சமரசங்களுடனே கழிகிற வாழ்க்கைதான் பலருக்கு வாய்த்திருக்கிறது.
அப்படியான வாழ்க்கையை சமூகத்தை நோக்கித் தட்டியெழுப்புகின்றன தங்கர்பச்சானின் வார்த்தைகள். “தண்ணீர் எப்படி உடனே கொதிநிலைக்கு வந்துவிடாதோ, அவ்வாறே என் மக்களின் மனநிலையும் தாமதமாகவேனும் ஒருநாள் கொதிநிலைக்கு வரும்’’ என்கிற தங்கரின் வார்த்தைகள் ஒரு பொன்னுலுகுக்கான நம்பிக்கையை நமக்குள் விதைக்கின்றன. மனசாட்சியின் சாட்டையடி இந்தப் புத்தகம்!