தமிழ் மயக்கம் தரும் மதுமதி. ..! தோழர்களே...! நமது...
தமிழ் மயக்கம் தரும் மதுமதி. ..!
தோழர்களே...! நமது எழுத்து தளத்தில் இளம் படைப்பாளி கவிதைகளை எழுதி வருகிறார். அவரின் படைப்புக்கள் நீங்கள் வாசித்தால் பல நாள் இலக்கியத்தில் ஊறிப்போன ஒரு முதிர்ந்த படைப்பாளி என்று நினைப்பீர்கள். ஆனால் அவர் ஒரு பள்ளி மாணவி. பெயர் மதுமதி, இலங்கை சேர்ந்த தமிழ் இளம் மங்கை.
என்னிடம் “ ஏதோ பொழுப்போக்காக எழுதுகிறேன் அண்ணா” என்கிறார் .
நம்மிடம் நானே பெரிய கவிஞன் என்று கர்வம் இருந்தால் அதை உடைத்தெறியும் வல்லமை இந்த இளம் கவிதாயினியின் படைப்புக்கு உண்டு. பொழுப்போக்காக எழுதுவதே இப்படி என்றால்..... தொழில்முறையில் எழுத ஆரம்பித்துவிட்டால்...........!!!!
இந்த இளம் படைப்பாளியை நாம் அனைவரும் நிச்சயம் ஆதரிக்க வேண்டும்.
செல்வி. மதுமதி தற்போது பதிவு செய்த படைப்பு எண் : http://eluthu.com/kavithai/200357.html.
மேலும் பல படைப்புக்கள் பதிவு செய்திருக்கிறார். வாசித்து பாருங்கள். நிச்சயம் பிரமித்து போவீர்கள் !!
-இரா.சந்தோஷ் குமார்.