எண்ணம்
(Eluthu Ennam)
தோழர்களுக்கு வணக்கம்,எழுத்தில் தோழர்கள் சில தொழில்நுட்ப கோளாறுகளை தெரிவித்துள்ளனர்.அந்த... (கீத்ஸ்)
29-Sep-2017 4:18 pm
தோழர்களுக்கு வணக்கம்,
எழுத்தில் தோழர்கள் சில தொழில்நுட்ப கோளாறுகளை தெரிவித்துள்ளனர்.
அந்த வேலைகள் தாமதமானதால். எழுத்து கவிதை போட்டி - அடுத்த வாரம் அறிவிக்க படும்.
-இப்படிக்கு
எழுத்து குழுமம்
எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!அந்த மகிழ்ச்சியான செய்தி... (கீத்ஸ்)
26-Sep-2017 2:31 pm
எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,
பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!
அந்த மகிழ்ச்சியான செய்தி :
எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.
போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.
காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.
இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.
மகிழ்ச்சிதானே!
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
மகிழ்வே..
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் 08-Aug-2020 1:29 pm
மகிழ்வான செய்தி ஆனாலும் கசப்பாக இருக்கிறது. என்னடா இப்படி சொல்றான் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீங்க. போட்டிக்கு நூறு இல்லை ஆயிரம் படைப்புக்கள் வரும் என்பது உறுதியான வெளிப்பாடு ஆனாலும் அந்த ஆயிரத்தில் ஒன்றுக்காவது பத்து தோழர்களின் வெகுமதியாக கருத்துக்கள் கிடைக்குமா என்பதில் விடையும் கேள்விக்குறி தான். நீண்ட காலங்களின் பின் எழுத்து தளத்தால் இப்போட்டி நடாத்தப்பட இருப்பது இன்பமான அறிவிப்பு. ஆனாலும் அதை விடவும் நீண்டகாலமாக நிலவும் நான் சொன்ன பற்றாக்குறை நீங்கி ஓர் ஆரோக்கியமான போட்டியாக இது அமையுமா என்பதில் மீண்டும் அதே கேள்விக்குறி தான்.இங்கு அற்புதமான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
ஒவ்வொரு எழுத்துக்களும் போட்டி போட வேண்டும் ஆனால் பொறாமை கொள்ளக்கூடாது. சிந்தனை நீர்விழ்ச்சியில்
கருத்து அருவிகள் சமுத்திரம் போல் பெறுக வேண்டும். வெகுமதிகள் யாவருக்கும் இல்லையென்றாலும்
மனத்திருப்தி ஒவ்வொரு படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லோரும் கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாவருக்கும் வாழ்த்துக்கள் தவறாக நான் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் என்னை மீறி ஏதும் தவறாக பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும்.
26-Sep-2017 5:59 pm
எழுத்து கவிதை போட்டி : வெற்றி பெற்ற படைப்பு
சீதளாதேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 3000 மற்றும் ஆச்சிரியமூட்டும் சிறப்புப் பரிசு பொருள் ஒன்றும் காத்திருக்கிறது.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
தயவு செய்து வெற்றிப்பெற்ற கவிதையின் லிங்கையும் குறிப்பிடவும் 11-May-2017 12:17 pm
வாழ்த்துக்கள். .. 01-Jan-2017 8:30 am
போட்டியில் வெற்றிப்பெறுவதற்காக உருவான கவிதையில்லை...போட்டி ஒரு களம் தானே தவிர முடிவு அல்ல...இங்கு எல்லோரும் கவிஞர்களே பிழை இல்லாமல் எழுதியோர் என்னை எழுதப் பழகும் குழந்தை என எண்ணி அமைதி ஆகிவிட்டனர் என்று நினைக்கிறேன்...அவர்கள் என்னை எதிரியாகவோ அல்லது போட்டியாளர் என்றோ எண்ணுவதாக தோன்றவில்லை...நன்றி சகோதரரே உங்கள் விமர்சனத்திற்கு ஏனெனில் விமர்சனம் மட்டுமே வளர்க்கும்.,எப்படியும் என் கருத்துகளுக்கு விமர்சனம் அனுப்புவீர்கள் என்னை வளர்க்க காத்திருக்கிறேன் 06-Dec-2016 7:53 pm
பிழை பொறுக்கவும் என்று கேட்டது என் பண்பாடு...பிழையை சுட்டி காட்டுங்கள் என்று சொன்னது இயலாமை...இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...நாங்கள் மதிப்பெண்ணிற்காகவும் தகுதியான பணிக்காகவும் உருவாக்கப்பட்ட தலைமுறை முடிந்தால் தவறினை சுட்டி காட்டி ஊக்கப்படுத்துங்கள்., 06-Dec-2016 7:32 pm