எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தண்ணீருக்காக போராடிய காலங்கள் மாறி.... 'தண்ணீர்' போராட வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறது.. மானுடம்.. ##தண்ணீர் தேசம் சென்னை## ..................snekaGM

மேலும்


ஒற்றை வரம்
சிலருக்கு நடைபாதையில் பூக்களை தூவினீர்கள்..
எனக்கு முட்களை அல்லவா பரப்பினீர்கள்...

சிலருக்கு சலங்கைகள் பூட்டி அழகு பார்த்தீர்கள்..
எமக்கோ விலங்குகளை அல்லவா பூட்டினீர்கள்...

 இறக்கைகள் கொண்டு விண்ணில் பறந்தேன்...
சிறகுகளை பொசுக்கினீர்கள்...

மண்ணில் விழுந்து மானாய் ஓடினேன்... கால்களை வெட்டினீர்கள்...

தரையில் கிடந்து சர்ப்பமாய் ஊர்ந்தேன்...
அடித்து கொன்று மண்ணில் புதைத்தீர்கள்...

விதையாய் உருவெடுத்து  மண்ணை கிழித்து எட்டிப் பார்த்தேன்...
காலால் நசுக்கி அமிழ்த்தினீர்கள்...

கார்காலம் ஆதலால் காட்டாற்றில் கலந்து நதியாய் நகர்ந்தேன்...
கடலில் ஆழ்த்தினீர்கள்...

மூழ்கியது நானல்ல ...
முடிந்தது ஆட்டம் என வெற்றி களிப்பில் மூழ்கியவர்கள் நீங்கள்...

கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் உயர்ந்தது...
கத்தி கதறி கடல் நீரில் தவமியற்றினேன்...

அலறல் ஒலி வான் பிளக்க, 
வானைப் பிளந்து வந்த சுழல்காற்று எனை மேக கூட்டம் சேர்த்தது...

மேகத்தில் மெதுவாய் மிதந்து பரம்பொருளின் பாதம் பற்றினேன்...
பரம்பொருள் எம்மை வரம் கேட்க கோரினார்...

நான் சற்றே சிந்தித்து ஒற்றை வரம் கேட்டேன்...


எம்மை பக்குவப் படுத்திய உயிர்களுக்கு, என் நன்றிக்கடனை செலுத்த வேண்டுமென்றேன்...

இறைவனின் வரம் பெற்று, மழையாய் மாறி மண்ணில் பொழிகிறேன்...

வருகின்ற வழியில் என் போன்ற பாவப்பட்ட பறவைகளின், பொசுக்கப் பட்ட சிறகுகளின் நெருப்பை அணைப்பேன்...

காலொடிந்த மான்களின் காயங்களை ஆற்ற, மூலிகை செடிகளை முளைக்கச் செய்வேன்...

புதைக்கப்பட்ட சர்ப்பங்களின், 
மூச்சுக்காற்றில் அமிர்தமாய் பொழிவேன்...

மண்ணைக் கிழித்து முட்டி மோதி வரும் செடிகளைக் கரம் கொடுத்து தூக்கி விடுவேன்....

சுழல்காற்றின் துணை கேட்டு, நதிகளை நல்வழியில் சேர்ப்பேன்...

இறுதியில் எமை தடுக்க நினைத்த மனங்களின் வேட்கையை தணிக்க குளிர்மழையாய் பொழிவேன்...

அத்தனைப் பணியும் முடித்து இறுதியில் கடலில் விழுந்து, மேகத்தில் மிதந்து, எம் பரம்பொருளின் பாதத்தில் சரணாகதி அடைவேன்...

மேலும்


வருவாயே நீயுமென்று.... 

எனது வரிகள்... தீபிகா நவீன் அவர்களின் இசையிலும் குரலிலும்.....

தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி
மீ.மணிகண்டன் மேலும்

சிறப்பு 06-Oct-2019 2:58 pm
நன்றி ஐயா தங்களின் ஆசியுடன் இன்னும் எழுதுவோம்.... நன்றி வாழ்க வளமுடன் 29-Jun-2019 2:30 am
மிகச் சிறப்பாக இருக்கிறது உங்கள் வரிகளும் இசையும் . பாடகியின் குரல் மிக இனிமை. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது நவீனமான இசையை ஒட்டியிருப்பினும் பாடகியின் திருத்தமான உச்சரிப்பும் இசை வரிகளை அமுக்காமல் இயைந்து போகும் அழகும் பாடலுக்கு மெருகு கூட்டுகிறது . இன்னும் சில கண்ணிகள் எழுதலாமே. மழை அவ்வளவு எளிதாகவா வருகிறது இந்நாட்களில் ? பாராட்டுக்கள் பாடல் பிரிய மீ மணிகண்டன் & இசைக்குழு .பகிர்கிறேன் 28-Jun-2019 8:48 am

மழை திருக்குறள்

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் )                        எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது .

மேலும்

மழை!!!

இரசனையை உருவாக்கும் மழையே 
எனை உன் இரசிகனாய் மாற்றும் மழையே!
அகத்தில் நின்று உனைக்காணும் போது உன் காட்சி அழகே !
புறத்தில் நின்று உன்னுடன் நனையும் போது உன் காட்சி அழகே!
மலைமீது நீ விழும் பொது உன் காட்சி பேரழகே !
மரம்செடிக்கொடிமீது நீ விழும் போது உன் காட்சி பேரழகே !
நிரம்பிய குளத்தில் உன் துளியால் பூக்கள் போடும் போதும் அழகே !
நிறைவற்ற மனதை உன் அழகிய கட்சியால் நிரப்பும் மழையே !
நீ என்றும் பேரழகே ! பேரழகே !!!!  

மேலும்

"மழை" வந்த நாள் அதனில் ..
மழை போலவே நானும் உனை பார்க்க வந்த நேரம் அதனில்
மழை என்னவோ" இடி" அதனை துணைக்கு அழைத்து வந்த நேரம் அதனில்
இடி என்னவோ "இருளை" கவ்விக்கொண்ட நேரம் அதனில்..
ஒரு கவிதை எழுத தோன்றிற்று
நிச்சயமாய் "தழுவல்" கவிதை அன்று..

இன்னொரு முறை "மழை" இடி" இருள்"  சேர்ந்தே வரட்டும்
தழுவி பின்னர் கவிதை எழுதலாம்

மேலும்


மேலே