எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Geeths - எண்ணம் (public)
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா

    மேலும்

    நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
    போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
    மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
    மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

கிராமத்துக் காதல்

காலங்கூட தெரியாம காலாற நடந்தபயல,
மூக்குத்தி அழகால உன்பின்னால திரிய வச்சியே,
உதட்டோர சிரிப்பால நெஞ்சத்த இனிக்க வச்சியே,
இடுப்போரம் மடிப்பால கள்ளக்கூட 
மறக்க வச்சியே,
கெண்டைக்காலு செவப்பால பித்துப்
பிடிக்க வச்சியே,

கரும்பு கூட கசந்து போகு உன் இனிப்பு பேச்சால,
சோறுகூட தேவப்படல உன் நெனப்பு வந்தால,

ஏரியோரம் காத்திருந்தேனே உன்
ஓரக்கண்ணு பார்வைக்கு,
எதிர்பாத்த கண்ணுக்கு உன்
அழகுமுகத்த காட்டுனப்போ,

நெஞ்சாங்கூட்டுல நூறுநெலாவும்
ஒன்னாசேந்து சிரிச்சுச்சே,
ஆகாசத்தெரையில மின்மினிப் 
பூச்சியெல்லாம் நாடகத்தப்
போட்டுக்காட்டி நம்ம காதல்
கதையப் பேசுச்சே,

பட்டிக்காட்டுப் பயலுக்கு
பாசத்தை காட்டினியே,
களவாணிக் கருப்பனுக்கு
காதல்தான் ஊட்டுனியே,

நீயிருக்கும் தெசபாத்து, 
கைகோக்க வந்தேனே,
நெழல்கூட தொடவிடாம, 
கண்ணவிட்டு மறஞ்சிட்டியே,

நேத்து பெஞ்ச மழையில, 
இன்னைக்கி மொளச்ச
காளான்தான் உம்பாசம்னு 
சொல்லாம சொல்லிப்புட்ட,

சொல்லிப்போன வார்த்தைக்கு 
அர்த்தங்கூட வெளங்காம, 
வயக்காட்டு பொம்மையையும்
கல்யாணத்துக்கு கூப்பிட்டே,

பஞ்சவர்ண கிளிபோல உன்ன
நானும் அலங்கரிச்சு , அழகுக்கு
அழகு சேக்க கூரைப்பட்ட வாங்குனே,

ஊரு சனங்க வியந்து பாக்க,
கல்யாண சேதி சொல்லி, 
உங்கழுத்துல நாங்கட்ட, 
தாலிக்கு தங்கங்கூட,
வயல வச்சு வாங்குனே,

புள்ளவொன்னு எனக்கு குடுத்து
அப்பான்னு கூப்பிட வெப்பான்னு
நெனச்சேனே,
நெனப்பயெல்லாம் வாரி சுருட்டி
தீய கொழுத்திப்போட்டாளே,

தேடித் தேடி சேத்த தேனாட்டம்
ஊறிப்போன காதலையும்,
ஒத்தக்கல்லு ஒதவியால
அடிச்சே கலச்சிட்டியே,

கலங்குன கண்ணுல தண்ணியின்னும் வத்தலயே,
வத்திப்போன தொண்டைக்கு தாகங்கூட எடுக்கலயே,
எடுபட்ட சிறுக்கி மனசுல கொஞ்சங்கூட
ஈரமில்ல,
ஈரமில்லா நெஞ்சுலயும்
பாற்கடல வார்த்த புள்ள,

சினிமாப்பாட்ட கேட்டாலும் அது
உன் நெனப்ப கூட்டுதே,
சின்னக்குளம் படித்துறையும் 
நம்ம கொஞ்சல் காட்டுதே,

பஞ்சுத்திரி கணங்கூட இல்லாத நெஞ்சுக்குள்ள,
எடதெரியா பாரம் வச்சு பூமியோட
பொதச்சுப்புட்ட,

உன்னுறவ மறந்துவிட 
நட்புறவ தேடுனே,
அந்த உறவும் கைய விட,
பூமி விட்டு போறே...!!!

- வெண்தேர்ச்செழியன்



மேலும்


மேலே