எண்ணம்
(Eluthu Ennam)
Abdul Fan of Red Rose...
உலக மங்கையர் தின நல்வாழ்த்துகள்:
எலும்பும் சதையும் ஆணும் பெண்ணும்,
வானமும் பூமியும் ஆணும் பெண்ணும்,
மரமும் நிழலும் ஆணும் பெண்ணும்,
ஒளியும் இருளும் ஆணும் பெண்ணும்,
கருவறை சிறந்தது அதனால் இவளும் சிறந்தவள்,
ருசிக்கு அதிகம் உணவுண்டு செரிக்க தாமதம் ஆகி அவதிபட்ட நிலை அனைவரும் உணர்ந்து இருக்க வாய்ப்புண்டு- சிந்தனையை செய் மனமெ...
உறங்கவும்,
உட்காரவும், உண்ணவும்,சாயவும் எதற்க்கும் நிம்மதி இல்லை,
எட்டுப் பத்து மாதங்கள் நிமிற்ந்து நடக்க சத்தில்லை,
இருப்பினும் சழித்துக்கொள்வதில்லை,
இவள் சகித்து கொள்கிறாள்,
இன்னும் எத்தனை எத்தனை தியாகங்கள்...!
அவன் நிச்சயம் சழித்துவிடுவான்,
உயிரை துச்சமாக்கி
சுமையை சுமை என்று என்னாமல் அதற்க்கும் உயிர் கொடுத்து தான் மிச்சம் ஆகிறாள் நிம்மதியாக,
அதனால் இவள் சிறந்தவள் ஆகிறாள்..!
உயர்வு தாழ்வு என்னும் பேதம் இங்கில்லை,
அவனுக்கு ஒப்பானவள் இவள்,
இருப்பினும் அவனை விட சிறந்தவள் தான் இவள்....!
-இவன் சிவப்பு ரோஜா இரசிகன் 🌹
பெண்மைக்கு இலக்கணம் அழகு .. அருமை நட்பே 20-Mar-2018 3:33 pm