எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானத்தின் நீரம் வைத்து நாம் நாட்களை என்னூகிறோம்

பூமியின் பலன்களை வைத்து நம் வேலைகளை செய்கிறோம்
கடலின் பலனை கொண்டு நாம் எல்லா இடங்களுக்கும் செல்கிறோம்
வானம் பூமி கடல் என்று எல்லா வற்றியதும் பயன்
படைத்த இறைவனுக்கு ?

மேலும்

தீர்ப்புகளில் எதிர் மறையை

மறையோன் நீ வழங்குதல்
நியாயமோ!. இதுவே உன்
இருப்போ! உன் இருப்போ!..
உரு கொடுத்து உயிர்
கொடுத்தாய் உடல் கொடுத்து
உணர்வும் கொடுத்தாய்
அற்புத படைப்பு தந்து

அதில் கண்களை மட்டும்
பறித்துக் கொண்டாய் -பறித்துக்
கொண்டாய் - உன் தீர்ப்புகளில்
எதிர் மறையோ மறையோனே!
மறையோனே! கொடுக்கும் மனம்
தந்தாய் மனம் தந்தாய் -உடன்
இல்லாமையை துணையாய் தந்தாய்
வெறுப்பும் நீ தந்து. -உடன்
என்னுள் காதலையும் நீ
தந்தாய்! நீயே தந்தாய்

இருப்பவன் இல்லாதவன் படித்தவன்
பண்புள்ளவன் கோபக்காரன்
கொலைகாரன்
கொடுக்கும் கொடையோனும் இருப்பதை
பறிக்கும் திருடனும் உயர்ந்தோன்
தாழ்ந்தோன் என்று எத்தனை
விதம் படைத்தாய் இப்படைப்பில்


உன் இருப்பை உயர்வு
தாழ்வெனும் படைப்பில் கேள்வி யானாய்.! கேள்வியானாய்.!
மறையோனே உன் இருப்பு
கேள்வி எனில் கேள்வியே
உன் இருப்போ உன் -இருப்போ
கேள்வியாய் நின்றவானே குழப்பம் தந்தவனே.!
உன் இருப்பை நான் உணர
எனக்கு நீ தந்த என்
வாழ்நாள் போதுமா என்
மறையோனே!.. மறையோனே!..






மேலும்


மேலே