எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நரகாசுரன் அல்ல நான்

@@@@@@@@@@@@@@
நரகாசுரன்கூட மனித இனத்துக்குத்தான்
ஊறுவிளைவித்தானாம்!

ஆனால் நம்மில் பலர்
உயிரினத்துக்கும் பயிரினத்துக்கும்
ஊறுவிளைவித்து
ஆனந்த பரவசத்தில்
அரத்தமில்லா இடியை நாண வைக்கும் ஓசையைக் கேட்டும்
கண்ணைப் பறிக்கும் ஒளியை ரசித்தும்
 கேடுதரும் கந்தகப் புகையை உள்வாங்கியும் 
களிநடமாடித் திரிகிறார்கள்!

@@@@@@@@@
65 வயது எனக்கு.  2 ஆம் வகுப்பு காலத்திலிருந்து பட்டாசு சனியனைத் தொடுவதில்லை. என் மனைவியும் மகனும் மகளும் என் வழியில் நடப்பவர்கள்.

மேலும்

நீங்கள் என்றும் நலமுடன்வாழ வாழ்த்துகிறேன் , தீபாவளி நல் வாழ்த்துக்கள் தோழமையே , god bless you all 29-Oct-2016 7:56 am
தமிழைப் போற்றும் உங்கள் எண்ணமாகட்டும், நன்மையை பாதையாக்கி அதில் பயணிக்கும் உங்கள் வாழ்வு முறையாகட்டும் ஒவ்வொன்றுமே வணக்கத்துக்குரியது. நான் சிறுவனாக இருக்கும்போது விவசாயம் செய்யும் அனைவரின் வீட்டிலும் இட்லியோடு தீபாவளி முடிந்துவிடும். ஆனால் மில்வேலை செய்யும் தந்தையர்கள் இருக்கும் என் வயது தோழர்களின் வீடுகளில்தான் தீபாவளி மகிழ்வுகள், பலகாரங்கள் என் களைகட்டும். அவர்களின் வீடுகளுக்கு முன் நின்று அவர்கள் வெடிப்பதைப் பார்த்தும், அவர்கள் அணியும் புத்தாடைகளைப் பார்த்தும் ஏதோ ஒரு திருப்தியோடும் கனத்த மனதோடும் வீடு திரும்புவோம். அப்போதும் சரி இப்போதும் சரி கரியாய்ப் போகும் பட்டாசுக்கு காசை செலவிடுவதில்லை. அன்றைய சூழ்நிலை அப்படி இருந்தாலும் இப்போதும் பட்டாசில்லாமல் கழிகிறது தீபாவளி. 29-Oct-2016 12:03 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே