எண்ணம்
(Eluthu Ennam)
மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு
நாள் 12.11.2016
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் ,
இராஜா அண்ணாமலை புரம்
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்)
தமிழன்பன் _80 விருதுகள்:
சீதா ரவி (இதழியல்)
கமல்காளிதாஸ் ( வடிவமைப்பாளர்)
Dr. கோபி ( யாழ் அரங்கம்)
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு)
கே.ஆர் இராசேந்திரன் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்த கவிதைகள்)
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்)
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்)
கமல்காளிதாஸ் ( வடிவமைப்பாளர்)
Dr. கோபி ( யாழ் அரங்கம்)
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு)
கே.ஆர் இராசேந்திரன் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்த கவிதைகள்)
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்)
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்)
என்னோடு சேர்ந்து கவிதை, ஊடகம், ஓவியம் . இதழியல்,கல்வி என பல பிரிவுகளில் விருது வாங்க இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்
இதைப் பகிர்ந்து வாழ்த்துகளையும் தந்த அகன் அய்யாவுக்கு நன்றி . குக்கிராமத்து மூலையில் இருந்தாலும் என்னையும் அங்கீகரித்து இந்த எழுத்து தளத்தில் நான் எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ்சார்ந்த படைப்புகளுக்கு எனக்கும் மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் ஒரு விருது. மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி எழுத்து தளத்துக்கும், உங்களது மேலான கருத்துகளில் என்னை உயரம்காண வைத்த தளத்தோழமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நன்றிகள்.
இந்தவிருதை உங்கள் அனைவருக்கும் என் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.
என்றும் உங்கள் ஆசிகளில்
நன்றியோடு நான்
நன்றி அய்யா. இன்னும் பலவற்றை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் வாழ்த்துக் கவிதை மூலம். எனக்குள் இன்னும் செழிப்பாக துளிர்விட்டிருக்கிறது அய்யா 15-Nov-2016 9:58 pm
உம் வாழ்த்துக்கு நன்றிகள் அன்புத் தம்பியே. இளையோர் பெரியோர் என எல்லோரின் மனங்களில் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மனம் மகிழ்கிறது. தலைமுறை தாண்டிய பல படைப்புகளைப் படைக்க ஒவ்வொருவரின் வாழ்த்தும் எனக்கு உறுதுணையாக இருக்கும். 04-Nov-2016 8:23 pm
அன்பு நண்பர் இராசேந்திரன்!
நலம். நலமே வாழ்க நீடூழி!
எழுத்து தளத்தில் தாங்கள்
எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகளுக்கு ்
மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் விருது பெற்ற செய்தி
கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன்.
வெற்றி புரிக்குச் செல்ல
வேதனை புரத்தைத் தாண்டு
என்றார் அண்ணா!
நீ
எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
தட்டுத் தடுமாறாத திடமான நெஞ்சுரம்
கட்டிக் காக்கும் தன்னம்பிக்கை
கொட்டி மகிழ்ந்த ஓயாத உழைப்பு
வேதனையை வெட்டித் தள்ளி சோதனையை நெட்டித் தள்ளி
சாதனையை எட்டிப் பிடித்தாய்
விருதை தட்டிப் பறித்தாய்.
மண்ணில் விதை போடுவதற்கு முன்-
உன்னில் அதைப் போட்டு உருவாக்கி
கண்ணில் அமை கருவிழியாய் காக்க
தன்னில் அது தழைக்கும் தல விருட்சம் !
குருவிகள் நெல் அறுவடைக்கு
வரும் நாளுக்காகக் காத்திருந்தன
குவித்து விட்டாய் சிறப்பான விருது குன்றொக்கும் களஞ்சியம் - நானும்
குருவிகளோடு இணைந்து விட்டேன்
கருத்துடனே பாராட்டி மகிழ்வவற்கே.!!
நண்ணுவ எல்லாம் நலமுற்றே
நாளும் ஈட்டும் நற்புகழால்
மெத்த நலம் பெருகி குடும்ப வாழ்க்கை
மேன்மேலும் வளம் பெருகி சிறப்படைய
உலகாளும் பரம்பொருளை
வணங்கி நின்று
உள்ளம் நிறைந்து மகிழ்ந்து
வாழ்த்துகின்றேன் :!
நல்வாழ்த்துக்கள்!
03-Nov-2016 6:27 pm
வாழ்த்துக்கள் அண்ணா 02-Nov-2016 9:02 pm