..........அசடன்...........
நீருக்கடியில் சென்று கண்விழித்தேன்,
மீன்கள் விரைந்துவந்தன விழிகளை வேட்டையாட,
மிரண்டுபோய் வெளிவந்து தூண்டிலை தேடினேன்,
அதே மீன்கள் கிடைக்குமாவென ஆதங்கம் தாங்கினேன்,
பயம்மருவி வீரமாகிட வெற்றிக்கு ஏங்கினேன்,
அட நீருக்குள் வெகுண்டது யாருக்குத்தெரியும் இங்கே?