கோவிலில் நான்.....

கோவிலில் நான் ...
குடும்பத்தினரோடு....
தூண் தழுவும் வேலைப்பாடு....
குளத்தோடு ஊறும்
நீர் போல .....
கோபுர நிழல்....
தேவாரப் பாடல்கள்...
தூணோடு நிற்கும்
பழங்கால எழுத்துக்கள்...
மாடங்கள் தாங்கும் புறாக்கள்....
புறா எச்சங்கள்....
என மெதுவாய் ஊர்ந்தபடி நான்.....
நடை சாற்றி விடும் என........
அவசரத்தில் மற்றவர்கள்.....
எப்படி சொல்ல அவர்களிடம்......
கோயிலின் தெய்வங்களை.....
நான் கண்டு விட்டேன் என?