..........மூர்க்கன்.............
கட்டுப்படாத மூர்க்கனை,
கட்டுப்படுத்த எத்தனை நூறுபேர் !
குதூகலத்தில் கும்மாளமிட்டு,
கதறவைக்கிறான் பெருங்கூட்டத்தை !!
தொடைதட்டி எதிர்வருவோரை,
தெருமுனைதாண்டி ஓடவைக்கிறான் !
அச்சம்தந்து அசரடித்து முட்டியுடைத்து,
மூலையில் கிடத்தி வைக்கிறான் !!
பட்டுத்துண்டு பதக்கம்சங்கிலி,
சிலிர்க்கும் சலங்கைக்கட்டு சிங்காரஅழகன் !!
புழுதிகிளப்பி புறப்பட்டுக் கிளம்பினால்,
அறுதியிட்டுத் தோற்கிறவழக்கம் கிடையாது !
நெஞ்சம் பதைபதைக்கவைத்தாலும்,
கொஞ்சும் அழகுக்கு சொந்தக்காரனிவன் !!
கடுமையாய் கிளர்ந்து எழும்போதும்,
கடவுளாய் கைகூப்பப்படுபவன் !
முட்டிமோதி தள்ளிஓடினாலும் ,
தப்பாமல் நேசிக்கவேபடுகிறவன் !!
பண்பாடு நாகரிகத்தின் தெம்பான பிரமிப்பு,
எங்களின் மேதகு ஜல்லிக்கட்டுக் காளையன் !!!