காதல் தூண்டில்
பேருந்தின் சந்திப்பில் எல்லாம்
அவளின் எதோச்சியான பார்வையை கூட,
கூட இருக்கும் கூட்டாளிகள்
டேய், மச்சி "அவ உன்னைதான்ட பாக்குற"
உசுபேத்தி உசுபேத்தியே ரணகளபடுத்தி விட்டனர்
இதயத்தை
வித்தியாசபடுத்துகிறேன்
நண்பர்களின் உருவத்தை விட
நான்கு நாளாய்
வராத தலை முடியை போல்,
வடிவமைக்கிறேன்
நல்ல இருக்கும் முடியை
கண் தெரிந்தும்
கருப்பு கண்ணாடியை அணிகிறேன்
வித்தியாசபடுத்த
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றில் வித்தியாசம்
ஆனால் அவளின் பார்வை மட்டும்
ஒரே மாதிரி????????