குரங்கு மனம்
விட்டுச் சென்ற காலம்
வீணாகிப் போனது,
நுழையாது போன பொழுதுகள்
பிழையென்று திட்டி தீர்த்தது,
இரவுப்படுக்கையிலே
நித்திரையை தேடினேன்......
நொந்து போன மனம்
சிந்தித்து சொன்னது
இனியொரு விதி செய்வேன்.
அலைந்த மனம் குழைந்து நிற்க
தொலைந்தது காட்சி ,
பூட்டிய கண்களில்....
இன்னொரு பகல்,
இன்னொரு குளியல்,
இன்றொரு வேலை - என்று
சென்றன பொழுதுகள்....
அஸ்தமனத்தில் உதித்த
வீரச்சிந்தனைகள்
அடுத்த நாள் உதயத்தில்
அஸ்தமித்து போயின....
பழையபடி வேதாளம்,
முருங்கை மரம்......?