தமிழ் .

வர்ணம் இழந்த வரைபடமாய்
வாழ்க்கை...
எச்சிலை உண்டு ஏப்பமிடும்
எக்காளம்....

மறந்து
தலைபோன தலை விதிகொண்ட
மழலைகளின் மறுதலிப்பு.
இலக்கணம் என்றால்என்ன ?
கேள்விகளில் வந்ததுண்டு பள்ளியில்...
இந்த கேள்வியாவது மிஞ்சுமா

தத்தெடுத்த மொழியே
தமிழ் மொழியாய்
புதிய தலைமுறை...
பெற்றவளை மறந்து
மற்றவளின் மடியில்
என் தமிழ் மக்கள்..

எழுதியவர் : Kavin Bala (20-Jan-13, 9:27 pm)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 87

மேலே