காகிதம். (11)

ஏ காகிதமே !

எத்தனை முறை
காகிதமாக கிடந்த உன்னை
காவியமாக்கி உள்ளேன்.

என்பேனா தம்பியை நீ
விட்டு விலகியதால் கதறி
கதறி அழுகிறான் என்பேனா ? இங்க்கு
உதறி உதறி அழுகிறான் என்பேனா ?

சமரசம் பேச வந்த என்
பென்சில் தங்கையைக்கூட நீ
மூக்குடைத்து அனுப்பி விட்டாய்.

சீவி சீவி சிங்காரித்த அவள்
ஆவி சிறுத்து சின்னதாக
ஆகிப் போனாள்.

அடுத்தவர் தவறழிக்க தன்னையே
இறப்புக்கு உள்ளாக்கும்
இரப்பரைக்கூட நீ
அலட்சியப் படுத்தி
அலப்பரை பண்ணுகிறாயாமே.

கள்ளக்காதலனாம்
பிரிண்டிங் பயல்
உன்னை பெண்டு எடுத்தாலும்
அவன் படுக்கையில் ஏறி
படுத்துக்கிடக்கிறாயாமே.

அவன் உன்னை
அடித்து
கிழிக்கிறானாம்,
கிழித்து அடிக்கிறானாமே.

எங்கள் அன்மையும் ஆண்மையும் மென்மையானது.
அவன் மையும், தண்மையும்,
வண்மையாயிற்றே ?
பிறந்தகத்தையும்,
புகுந்தகத்தையும் துறந்து
அச்சகத்தை அடைந்து அடையாளம்
மாறிப்போனாய்.

இன்று நீயும் தேவையில்லை.
நானும் தேவையில்லை.
ஈமெயிலும் , எஸ்எம்எஸ் ம் வந்து
எழுத்தை பதிவு செய்கின்றன.
பாதுகாக்கின்றன.
எழுத்தும் அதை ஆதரிக்கிறது.
அணிசெய்கிறது.

நாமில்லா விட்டாலும் எழுத்து வாழும்.
எழுத்து என்றும் நிலைத்து வாழும்.

(காகிதமும், எழுது பொருட்களும்.)

ஜே. ஜி. ரூபன்.
01.10.08

By cell phone

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (28-Jan-13, 1:17 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 130

மேலே