நான்காம் மரணம்
(என் "மூன்றாம் மரணம்" என்ற கவிதையின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டது)
காதலித்துத் தோற்றவர் நானில்லை நாங்கள்!
நாங்கள் தனித்தனியே காதலித்துத் தோற்றோம்
எங்கள் தோல்வி மற்றவரிடமில்லை எங்களுக்கிடையேதான்!
சொல்லாமல் போனது யார் குற்றம்
சொல்லியிருந்தால் ஒருவேளை அது ஊருக்கே குற்றம்!
திரைக்கதைகளில் மட்டுமே காதலை ஊர் போற்றும்!
இனியும் தடையிருக்குமோ -- சொன்னால்
அவளிடமிருந்து விடை கிடைக்குமோ?
சொல்வதில் அர்த்தம் இருக்குமோ?
சொல்லத்தான் போகிறேன் -- அவளோடு
வாழத்தான் போகிறேன்! -- விதியை
வெல்லத்தான் போகிறேன்!
இதோ கிளம்பிவிட்டேன்...
அவள் வீடும் நெருங்கிவிட்டேன்..
அங்கு
அமைதியான சூழல்
இல்லத்தில் யாருமில்லை - என்
உள்ளத்தில் பரபரப்பு - என் கால்கள்
நிலத்தில் இல்லை!
அவள் கால்களும்தான்
ஆம்!
உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது என் எதிர்காலம்
உயிர்பிரிந்துகொண்டிருக்கும் பாதி சடலமாக....
நான் எனது நான்காம் மரணத்தில்
உறையைத் தொடங்கினேன்....! (தொடரும்)