வாழட்டும் மனித மனம்

பிரார்த்தனை ஏன் ?
என்றும் எப்போதும் வேண்டும்
எந்நாளும் சந்தோசமாக வாழ..

நடைபெறுவது....
வியாபாரிபோல
பேரம் பேசுவதோ ?
பிறரிடம் சென்று
யாசகம் கேட்பதோ அல்ல ?
எப்போதும் வேண்டும் நிரந்தரமாக ..!

மவுனம் காப்பது
அன்பு சேர்ப்பது
சக்தி சேர்ப்பது
கருணை கொள்வது
இவை வேண்டும் நமக்கு எப்போதும் ...!

ஆறாத ரணங்களும்
தீராத வலிகளும்
ஆற்றக் கூடியது
தீர்க்ககூடியது எப்போதும் நிரந்தரமாக..!

வாரி வாரி வழங்கும்
அன்பையும் ,கருணையும்
தொட்டணைத் தூறும்
மணர் கேணியாக ஊற்றெடுக்கும்
அற்புதமான மருந்து
இவை வேண்டும் எப்போதும் நிரந்தரமாக ...!

காயப் பட்ட மனிதர்களுக்காக
பசியில் வாடும் மனிதர்களுக்காக
வாடுகின்ற குழந்தைகளுக்காக
நோய்வாய்ப்பட்ட வயோதிகர்களுக்காக
நாம் மனமிரங்கி கசிந்துருகி
கண்ணீர் வடிப்பது
இவையே வேண்டும் எப்போதும் நமக்கு ...!

துயரங்களும்
பிரச்சனைகளும்
நாமே காரணமாய் இருக்கும் பட்சம்
பிரார்த்தனைகளைத் தேடி அணுகுகிறோம்
இவையே மனித மனம் வாழ
எப்போதும் வேண்டும் நமக்கு ...!

'இளைதாக முள் மரம் கொல்க '
என்ற வள்ளுவன் கூற்றைக் கொண்டே...
நாம் மரங்களை வளரவிட்டு
கோடரிகளைத் தேடுகிறோம். . ஏன் ?
நாம் நம்மையே சிந்திக்கத்தானே ..
சிந்தியுங்கள தமிழ் தோழமைகளே ..
மனித மனங்கள் வாழ ..!!!

எழுதியவர் : ஜெயா ராஜரெத்தினம் (1-Feb-13, 3:59 pm)
பார்வை : 121

மேலே