என் கவிதையில் சில வரிகள்
உனக்காக எழுதிய கவிதையின் வரிகள்
தீர்ந்தே போனது !
உன்னால் வந்த காதலின் வலிகள்
என் நெஞ்சில் தீரல!
வார்த்தையின்றி என் இதயம்
உன் முன்னே பேச துடிக்குமே !
வாய்ப்புகள் இன்றி நாட்களோடு
நானும் நடக்கிறேன்!
எந்தன் நாயகனின் நாயகி நீ தான் என்று
தினம் தினம் கனவிலே மிதக்கிறேன் !
எந்தன் காலை பொழுது
உந்தன் வீட்டின் முன்னே விடியுமே !
உந்தன் வருகை எண்ணி எந்தன் விழியும்
உன்னை காண துடி துடிக்குமே !
நீ வண்டியில போகும் போது வீல போல
என் மனம் உன்ன சுத்துமே !
நீ என்னை தாண்டி போகும் போது சத்தமின்றி
என் இதயம் கத்துமே !
நண்பர்கள் என் பெயரை சொல்லி சொல்லி அழைத்த போது! திரும்பல!
நித்தமும் உன் பெயரை சொல்லி சொல்லி
என் பெயரை மறந்த கதை எனக்கே தெரியல !
பருந்து போல பறந்தேன்!
இப்ப பட்டாம் பூச்சி
போல உன்ன சுத்தி பறக்கிறேன்!
பாவம் என்று ஒரு பார்வை பார்த்தால்
பாவி நான் காவி போட தேவையில்ல!
காற்றை போல உன்னை சுற்றி கொள்வேன் கவிதை தந்து என் காதல் சொல்வேன் !
என் காதோரம் வந்து மெல்ல உன் காதல் சொன்னால்!
காற்றோடு கலந்து உயிர்
மூச்சாகிவிடுவென் !
இல்லையெனில் கடலோடு கலந்து
காணமல் போய் விடுவேன் !
................