கைப்பேசி
கையில் உன்னை வைத்தாலே
கவனம் எல்லாம் உன் மேலே
கைபேசி இல்லா வாழ்நாளே
கிறுக்கு பிடிக்கும் என்பாரே!!
உலகை எல்லாம் கைக்குள்ளே
கொண்டு வந்து கொடுத்தாயே
உலகில் உள்ள எல்லோரும்
உன்னை வாங்க செய்தாயே!!
விரலின் வித்தை உன்னோடு சொன்னேன்
என்னுடைய நண்பன் ஆகி விட்டாய்
கையோடு கட்டிக் கொண்டாய்
காதோடு கொஞ்சி சென்றாய் !!
தொலைவு அதிகம் இருந்த போதிலும்
மனதோடு நெருக்கம் கொண்டு வந்தாய்
நெருக்கடியான சூழ்நிலைகளிலும்
நிச்சயம் நீ தான் உதவி செய்தாய்!!
தனிமை விரட்டி விட்டாய்
என்னோடு தூக்கம் கொண்டாய்
தொழில்நுட்பம் நீ வந்ததாலே
உலகை சுருங்க செய்தாய் !!
நீ இல்லா உலகம்
ஆமை வேகம் ஓடும்
அதை உணர்வார் எல்லாரும் - எனவே
நீ வேண்டும் என்றென்றும் !!