நீல விழி ஓவியமே
![](https://eluthu.com/images/loading.gif)
நைல் நிகர்த்த விழி அழகே
இமை கவித்து என் நெஞ்சினில்
அந்தி மாலையையும்
அழகிய கவிதைகளையும் விரித்தவளே
நீல விழி ஓவியமே
உன்னில் நான் விரும்புவதும்
நின் விழியின் நீலமே
---கவின் சாரலன்
கவிக்குறிப்பு: நைல் எகிப்த்தில் தொடங்கி ஓடும்
நீண்ட நதி. நீல நைல் என்று கவிஞர்கள் போற்றும்
நதி.