முன்னுக்கு பின் முரண்

பைபிள் திருக்குரான் பகவத்கீதை
பல நாளாக பரணில் இருந்தது
தூசு தட்டி திறந்துவிட்டேன் இன்று
நான் ஆன்மிகவாதி அல்ல
நார்த்திகனும் அல்ல பகுத்தறிவாளன்
பெரியாரின் பேரன் என மார்தட்டிகொள்ளவில்லை யாம்
அவரின் மீசையில் ஒரு மயிர்
அடிமைபடுத்தும் சாதி
உயிரை எடுக்கும் மதம்
இருந்தால் என்ன? இறந்தால் என்ன ?
ஒருகொடி ஒன்றாய் ஏற்றிவிட்டு
வீட்டுக்கு ஒரு கொடி ஏனோ ?
பங்காளி சண்டை போட்டுக்கொள்ள
பாரதம் என்ன வெறும் நிலமோ ?
இறைவன் இல்லை இல்லவே இல்லை
இருக்கிறது என்றால் காட்டுக
இயற்கையெய் காட்டாதீர்
இது பகுத்தறிவாளனின் மீசை மயிர்
கண்ணை குத்திவிடும் .

எழுதியவர் : jagadeeshwaran (4-Feb-13, 7:48 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 156

மேலே