உலக மொட்டை அடிப்போர் தினம்
சுதந்திர தினம்......!
தேசிய கொடி விற்பவனுக்கு கொண்டாட்டம்
காதலர் தினம் .....!
ரோஜா பூக்கள் விற்பவனுக்கு கொண்டாட்டம்
அன்னையர் தினம் .....!
அன்னையர் தின வாழ்த்து அட்டை விற்பவனுக்குகொண்டாட்டம்
வியாபாரம் ....வியாபாரம்...வியாபாரம்...
எல்லாம் வியாபாரம்
என்னிடம் கொஞ்ச சவரக்கத்தி விற்பனைக்கு உண்டு
உருவாக்க போகிறேன்
உலக மொட்டை அடிப்போர் தினம்.....!