காகித கப்பல்

நினைக்காமல் இருந்தாலும்,,,
நினைவு கூறும் என் கவிதைகள்,,
காட்டு மல்லி வாசம் கண்டு
உன் கால் தடம் தேடினேன்
என் நெஞ்சில் முள்ளாய் பதிந்தாய்,,,,
...

நேசிக்க நேசிக்கத்தான்
நெறிஞ்சி முள்ளும்,,,
விதையாய் மாறும்,,,
நீ குத்திசென்ற
என் இதயத்தில்,,,

உன்னை நேசிக்க தவறியது
என் குற்றமா ,,,??? ,,இல்லை,,
உன்னை நேசிததுமட்டும்தான்
என் குற்றமா,,,??,,,

உன் புன்னகையை யாசித்தேன் ,,,,,
என் எண்ணங்களில் நீ வதைத்தாய்,,

உன் கனவு சிறையில்
நான் சிதையேருகிரேன்,,,
நீ விட்டு சென்ற கந்தல்,,,
காகிதங்களாய்,,,,

இன்று சாலையில் தேங்கிய
மழைநீரில்,,,பயணப்பட்டு,,,
குடைசாய்ந்து கிடக்கும்,,,
ஒரு காகித கப்பலாய்,,,
என் கவிதைகள்,,,,
உன் காதலை ,,கனவாய்,,,
சுமந்திருக்கிறது,,,
சுமக்க முடியாத
பாரங்களாய் !!

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (5-Feb-13, 8:02 am)
சேர்த்தது : SURIYA
Tanglish : kaakitha kappal
பார்வை : 117

மேலே